Breaking News

கூகுள் பே-யில் புதிய வசதி..பின்நம்பர் ,பாஸ்வேர்டு எதுவும் தேவையில்லை முழு விவரம் google pay upi lite tamil

அட்மின் மீடியா
0

கூகுள் UPI LITE பேமெண்ட் சேவையில் இனி UPI PIN பதிவிடாமல் ஒரே கிளிக்கில் பேமெண்ட் செய்ய முடியும் முழு விவரம்

கூகுள் பே தற்போது யுபிஐ லைட் ( UPI LITE) என்ற தளத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதாவது கூகுள் பே செயலியில் UPI PIN பதிவிடாமல் ஒரே கிளிக்கில் பணம் செலுத்தும் வகையில் புதிய UPI LITE சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. 

இப்போது வரை எந்தவொரு யுபிஐ பேமண்ட் ஆக இருந்தாலும் யுபிஐ பின் அல்லது பாஸ்வேர்டு கொடுக்க வேண்டி உள்ளது.ஆனால் இனிமேல் பின் பதிவிடாமல் பேமெண்ட் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.



கூகுள் பே:-

கூகுள் பேவில் பொதுவாக நாம் எந்தவொரு வங்கிக்கோ அல்லது ஸ்கேன் செய்தோ, அல்லது மொபைல் நம்பருக்கோ பணம் அனுப்ப கூகுள் பே மூலம் அனுப்புவோம் அப்போது அதில் பணப்பரிவரித்தனை மேற்கொள்ளும் முன் பயணர் அதற்கான 4 அல்லது 6 இலக்க எண்களை உள்ளிட வேண்டும் அதாவது பின் நம்பர் , அல்லது யுபிஐ பாஸ்வேர்டு கொடுத்துத் தான் நாம் பணம் அனுப்புவோம்

ஆனால் தற்போது இந்த சேவையிலும் பாஸ்வேர்ட் இல்லாமல் யார் வேண்டுமானாலும் பேமென்ட் செய்ய முடியும் வகையில் யுபிஐ லைட் சேவை யை அறிமுகம் செய்துள்ளது கூகுள்

முன்னதாக பேடிஎம் நிறுவனமும் சில மாதங்களுக்கு முன்பு யுபிஐ லைட் சேவையை அறிமுகம் செய்தது, இதேபோன்ற சேவையை தான் தற்போது கூகுள் பே அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் லைட்:-

கூகுள் பே யுபிஐ லைட் சேவையை பயன்படுத்துபவர்கள் ஒரு நாளைக்கு 2 முறை 2ஆயிரம் ரூபாய் வரை வேலெட்டில் வைத்துக் கொண்டு 200 ரூபாய்க்கும் கீழ் பின் போடாமல் பேமெண்ட் செய்து கொள்ள முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

கூகுள் பே யுபிஐ லைட் சேவை என்பது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்தாலும், ஒவ்வொரு முறையும் வங்கி கணக்கில் இருந்து பணம்  போகாது. இதற்கு மாறாக யுபிஐ லைட் சேவையின் வேலெட்டில் பணம் லோடு செய்துக்கொண்டு அதன் மூலம் பாஸ்வேர்டு இல்லாமல் பேமெண்ட் செய்யலாம்

மேலும் கூகுள் பே யுபிஐ லைட் சேவையில் ஒரு நாளில் இரண்டு முறை ரூ.2,000 என மொத்தம் ரூ. 4000 வரை லோட் செய்து பரிவர்த்தனை செய்யலாம். அதில் ரூ.200 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு பின்நம்பர் செலுத்த தேவையில்லை. 

சேவை பெறுவது எப்படி:-

Play Store சென்று  Google Pay பயன்பாட்டைப் பதிவிறக்கவும் அல்லது அப்டேட் செய்யவும்

நீங்கள் ஏற்க்கனவே கூகுள் பே செயலி வைத்து இருந்தால் அதில் UPI LITE என்பதை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்தாலே போதுமானது. 

கூகுள் பே ப்ரொவைல்  சென்று அதில் setup payment methods செலக்ட் செய்து UPI லைட் செலக்ட் செய்யவும்.

அடுத்து continue கிளிக் செய்து ரூ.2000 வரை கட்டணம் செலுத்தலாம்.யு.பி.ஐ லைட் மூலம் பணம் செலுத்த யு.பி.ஐ லைட் அக்கவுண்ட்டை செலக்ட் செய்து பின் ப்ரீ பே என்பதை குறிப்பிடவும்.அவ்வளவு தான் இப்போது யு.பி.ஐ லைட் மூலம் பணம் செலுத்தலாம்.

ஒரு நாளுக்கு 4000 ரூபாய் தொகையை லோடு செய்து 200 ரூபாய்க்கு கீழ் எவ்விதமான யுபிஐ பாஸ்வேர்ட் இல்லாமல் பேமெண்ட் செய்ய முடியும். பேமெண்ட் முடியும் போது Pay PIN-Free என்பதை கிளிக் செய்தால் போதும்.

Pay with UPI Lite on Google PayUPI Lite is an on-device wallet with the following key features:

Make payments of up to ₹200 INR without the use of a UPI PIN on the Google Pay app.

No fees.

No KYC required.

Maximum balance is ₹2,000 INR and you can spend up to a total of ₹4,000 INR within 24 hours.

To get started, 

set up your UPI Lite balance:

Choose an eligible bank account that supports UPI Lite to add money from. 

Find the list of banks that support UPI Lite below.

Add up to ₹2,000 INR to your UPI Lite balance.

When you set up your UPI Lite balance, UPI Lite will be the default payment method option for payments of ₹200 INR or less.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback