Breaking News

நாகையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறைசிக்கல் சிங்காரவேலர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறை

விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜூலை 8ம் தேதி வேளை நாளாக அறிவிப்பு- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே சிக்கலில் உள்ள சிங்காரவேலன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகுமகா கும்பாபிஷேகம் 5 ம் தேதி நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடை பெற்றது வருகிறது.

ஜூலை 5ஆம் தேதி காலை 9.45 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிய உள்ளனர்.

விழாவில் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் தாலுகா காவல் நிலைய காவலர்கள் ஆகியோர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளார்கள்

இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு ஜூலை 05 ம் தேதி ம் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வண்ணம் ஜூலை 8 ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback