மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவிதொகை, வங்கிகடன், திருமண உதவித் தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவிதொகை, உபகரணங்கள் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலமாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள் பெறுதல், வங்கி கடன் மானியம், திருமண உதவித் தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ஆகியவை பெறுவதற்கு இ-சேவை மையம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.மேலும் https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது இ-சேவைமையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
தமிழ்நாடு மின்ஆளுமை முகமை (TNeGA) மூலமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஐந்து திட்டங்களான
1.கல்வி உதவித்தொகை விண்ணப்பம்
2. உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம்
3.வங்கி கடன் மானிய
4.விண்ணப்பம் திருமண தொகை விண்ணப்பம்
5. மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம்
ஆகியன இ-சேவை மையம் மூலம் உதவித் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்