பெங்களூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக டாக்டர்.அசிமாபானு நியமனம் Bangalore Medical College Gets First Muslim Woman Principal dr asima banu
கர்நாடகா மாநிலம் பெங்களூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக டாக்டர்.அசிமா பானு நியமிக்கபட்டுள்ளார்! மேலும் பெங்களூர் மருத்துவக் கல்லூரி வரலாற்றின் முதல் முஸ்லிம் முதல்வரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது
பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (பிஎம்சிஆர்ஐ) 23 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர் அசிமா பானு, புதன்கிழமை அந்த நிறுவனத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
2020 ஆம் ஆண்டில் விக்டோரியா மருத்துவமனையின் ட்ராமா கேர் சென்டரில் கோவிட் வார்டின் நோடல் அதிகாரியாக ஆசிமா அவர்கள் சிறப்பாக பணியாற்றியதற்காக அபோது அனைவராலும் பாராட்டப்பட்டார்.
கொரானா காலத்தில் நோயாளிகள் தனக்கு நேரடியாக செய்தி அனுப்பும் வாட்ஸ்அப் குழுவை நிறுவினார், தகவல்தொடர்புக்கான சேனலை உருவாக்கி அவர்களின் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்தார்.
டாக்டர் அசிமா பானு பிஎம்சிஆர்ஐயில் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளதால், அவரது நியமனம் மருத்துவ நிபுணர்களுக்கு, குறிப்பாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படும்.
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி