மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 8 ம் வகுப்பு படித்திருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 8 ம் வகுப்பு படித்திருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்
நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி:-
அலுவலக உதவியாளர்
பணியிடம்:-
நீலகிரி
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
BC, MBC விண்ணப்பத்தர்களுக்கு 2 ஆண்டுகள்
SC, ST விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு
கல்வி தகுதி:-
நீலகிரி கலெக்டர் அலுவலக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களில் இருந்து
8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
மாத சம்பளம்:-
மாதம் ரூ.15,700 – 50,000/- வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
27-07-2023
நிபந்தனைகள்:-
1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://nilgiris.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் 17.07.2023 அன்று முதல் 27.07.2023 அன்று பிற்பகல் 05.45 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளர்ச்சி பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
3. இணையதளத்தில பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
4. அரசு விதிகளின் படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
5. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
6. காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
7. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2023/07/2023071431-2.pdf
Tags: வேலைவாய்ப்பு