Breaking News

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சுமார் ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அமைச்சர் பொன்முடி வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கபட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கெளதம சிகாமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு நுங்கப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். 

அங்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகியோரிடம் தனித்தனியே விடிய, விடிய விசாரணை நடத்தியஅமலாக்கதுறையினர் அதிகாலை 3 மணி அளவில் விசாரனையை நிறைவு செய்தனர், அதன்பின்பு  மாலை 4 மணிக்கு மீண்டும் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

இந்த நிலையில், சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி விசாரணைக்காக மீண்டும் ஆஜராகினார்கள்

இந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை 

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி இவர்களுக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தினோம். 

அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.81.7 லட்சம் பணமும், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் (பிரிட்டிஷ் பவுண்ட்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள் பறிமுதல்.செய்யப்பட்டுள்ளது என்றும் அவரது வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கபட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback