Breaking News

பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஜூலை 28 ம் தேதி வரை அவகாசம் சட்ட ஆணையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பொது சிவில் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக யோசனைகள், கருத்துகள் கூற மேலும் 2 வாரம் வழங்குவதாக மத்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.



பொது சிவில் சட்டம் பற்றி தங்களது கருத்துகள், பார்வையை பொதுமக்கள், மத அமைப்புகள் ஜூலை 28 ம் தேதிக்குள்  membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சலில் சமர்ப்பிக்கலாம் என இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது 

முன்னதாக ஜூலை 14-ம் தேதி கடைசி நாள் என கூறி இருந்தது  இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் ஆன்லைன் மூலமாகவும், தங்களது கருத்துகளை அனுப்பி வருகின்றனர். இதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமைக்குள் முடிவடைந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 2 வாரங்கள் நீட்டித்துள்ளதாக மத்திய சட்ட ஆணையம் கூறியுள்ளது.

அதாவது பொதுமக்கள் தங்கள் கருத்துகளை இம்மாதம் 28-ம் தேதி வரை தெரிவிக்க முடியும். என சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொது சிவில் சட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிப்பது எப்படி 

உங்களது மொபைலில் உள்ள ஜிமெயில் ஓபன் செய்து கொள்ளுங்கள் 

அடுத்து இ மெயில் அனுப்ப என்பதை கிளிக் செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள் அடுத்து Subject ல் Regarding UCC என்று டைப் செய்து கொள்ளுங்கள் 

அடுத்து TO என்பதில் சட்ட ஆணையத்தின் ஈமெயில் முகவரியை டைப் செய்து கொள்ளுங்கள் இ மெயில் முகவரி:- membersecretary-lci@gov.in 

Compose Email பகுதியில் உங்கள் கருத்தை ஆங்கிலத்தில் பதிவிட்டு இறுதியாக உங்கள் பெயர் குறிப்பிட்டு SEND  செய்து விடுங்கள் அவ்வளவுதான். 

ஆட்சேபனை கருத்துக்கள் பதிவு செய்ய கடைசி நாள்;- 28 - 07 - 2023 


Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback