ஜூலை 22 ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு !! அட்டவனை முழு விவரம்
பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி தொடங்கி ஜூன் 4ஆம் தேதி நிறைவடைந்தது.
இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1.5 லட்சம் இடங்களுக்கு, 1.80 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதனைத்தொடர்ந்து 2023 - 24 ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் 26 ஆம் தேதி வெளியானது.
இந்தநிலையில் தற்போது பொறியியல் கலந்தாய்வு அட்டவடையை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ம் தேதி தொடங்குகிறது
ஜூலை 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை சிறப்பு பிரிவு கலந்தாய்வு
ஜூலை 28ம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது
ஜூலை 22 முதல் 26ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை பொதுப் பிரிவிற்கான முதற்கட்ட கலந்தாய்வு
ஆக 9 - 22ஆம் தேதி வரை 2ம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்
ஆக.22- செப்.3 வரை 3ஆம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்
அரசு பள்ளி மாணவர்கள் 11,804 பேருக்கு, 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது
வழக்கமாக 4 சுற்றுகளாக நடத்தப்படும் கலந்தாய்வு, இந்த ஆண்டு 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது
ஒரு கல்லூரியில் சேர்ந்த பிறகு மாணவர்கள், வேற ஏதேனும் கல்லூரிக்குச் செல்ல விரும்பினால் அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தி உள்ளோம்
ஜூலை 30ம் தேதி வரை கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டு, ஜூலை 31 அன்று கலந்தாய்வு மற்றும் மற்றும் மாணவர்கள் சேர்க்கை குறித்த முழு விவரங்கள் அறிவிக்கப்படும்!
Tags: தமிழக செய்திகள்