Breaking News

இந்தியாவில் முதல் முறையாக பெண்கள் மட்டும் பயணம் செய்யும் ஹஜ் விமானம் இயக்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முழு விவரம் India’s first all women Haj flight

அட்மின் மீடியா
0

முதல் முறையாக பெண்களுக்கான ஹஜ் விமானம் இயக்கம் இந்தியாவில் முதல் முறையாக பெண்களுக்கான ஹஜ் விமானத்தை இயக்கியுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 145 பெண் பயணிகளுடன் விமானிகள், பணியாளர்கள் என அனைத்து பணிகளிலும் பெண்களை ஈடுபடுத்திய இந்த விமானம் கோழிக்கோட்டிலிருந்து, சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரை சென்றடந்தது



இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் இருந்து பெண்கள் மட்டும் பயணிக்கும் முதல் ஹஜ் விமானம் ஜெட்டாவுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது.

இஸ்லாமியர்களின் செல்லும் புனித ஹஜ் பயணம் செய்ய முஸ்லிம்கள் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு செல்வார்கள். இந்த ஹஜ் பயனம் செல்ல ஏர் இந்தியா தனது முதல் அனைத்து பெண்களும் ஹஜ் விமானத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. 

ஏர் இந்தியா வின் ஐ.எக்ஸ். 3025 என்ற எண் கொண்டவிமானத்தில் மொத்தம் 145 மகளிர் பயணித்தனர். காக்பிட் மற்றும் கேபின் இரண்டிலும் ஒரு பெண் குழுவினர் இருந்தனர், மேலும் தரை செயல்பாடுகளை நிர்வகிக்கும் பெண்களும் இருந்தனர். கேபினில் இருந்த சுஷ்மா ஷர்மா, பிஜிதா எம்பி, ஸ்ரீலட்சுமி மற்றும் சுபாங்கி பிஸ்வாஸ் ஆகியோரின் ஆதரவுடன் கேப்டன் கனிகா மெஹ்ரா மற்றும் முதல் அதிகாரி கரிமா பாசி ஆகியோர் ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கினர்.

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback