பக்ரீத் பண்டிகைக்கு ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது – மதுரை ஐகோர்ட் கிளை
பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க கோரி வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவு.
தமிழகம் முழுவது வருகின்ற ஜூன் 29ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
பக்ரீத் பண்டிகைக்கு இஸ்லாமியர்கள் ஆடு, மாடுகளை வெட்டி குர்பானி கொடுப்பது வழக்கம் ஆகும் ,
இந்நிலையில் மாநகராட்சி அனுமதிக்காத இடத்தில் ஆடு, மாடுகளை வெட்டி பலியிட தடைவிதிக்க கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்
இன்று வழக்கு விசாரனை நடைபெற்றது அப்போது அரசிடம் விளக்கம் பெறாமல் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது என்றும் ஏன் பண்டிகை நெருங்கும் கடைசி நேரத்தில் மனுதாக்கல் செய்துள்ளீர்கள் எனவும் கடந்த ஆண்டு நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் நீங்கள் ஏன்? கடைசி நேரத்தில் மனுதாக்கல் செய்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்ட நீதிபதிகள்
இந்த வழக்கு குறித்து திருச்சி காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு, நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Tags: தமிழக செய்திகள்