Breaking News

கேரளாவில் இருந்து மெக்காவுக்கு 370 நாட்கள் 8640 கிலோமீட்டர் நடந்தே சென்ற இளைஞர்! முழு விவரம் kerala to mecca by walk Shihab Chottur

அட்மின் மீடியா
0

கேரளாவில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஹஜ் புனித யாத்திரைக்கு நடந்தே சென்ற ஷிஹாப் சோத்தூர் என்ற இளைஞர் 8,640 கி.மீ. தூரத்தை, சுமார் 370 நாட்கள் நடந்து வெற்றிகரமாக பயணத்தை முடித்துள்ளார்!கடந்தாண்டு ஜூன் 2ம் தேதி பயணத்தை தொடங்கிய இவர், பாகிஸ்தான், ஈரான், ஈராக், குவைத் வழியாக சென்று மெக்காவை அடைந்துள்ளார்!


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிஹாப் சோட்டூர். இவர் கடந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி மெக்காவை நோக்கி நடை பயணத்தை தொடர்ந்தார். , பாகிஸ்தான் வழியாகத் ஈரானைச் சென்று, ஈராக் ஈரான் குவைத், சவுதி அரேபியா வழியாக சவூதி மெக்காவை அடைந்துள்ளார். 370 நாட்களாக, 8 ஆயிரத்து 640 கிலோ மீட்டர் நடந்து சென்று மக்காவை அடைந்தார். 

சவுதி அரேபியாவுக்குள் நுழைந்தவுடன் ஷிஹாப் முதலில் மெதினாவுக்குச் சென்றார். அங்கே 21 நாட்கள் தங்கியிருந்து ஆன்மிகக் கடமைகளை முடித்துக் கொண்டு அவர் மெக்கா புறப்பட்டார். மெதினாவில் இருந்து மெக்காவுக்கும் நடந்தே சென்றார்.

மலப்புரம் டூ மெக்கா தனது முழு பயணத்தின் போது, ​​யூடியூப் மூலம் தனது பார்வையாளர்களுக்கு வீடியோ போட்டு தெரியப்படுத்தி வந்துள்ளார்

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback