Breaking News

2024 நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்கொள்வோம் 16 எதிர்கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு முழு விவரம்

அட்மின் மீடியா
0

2024ல் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக, பீகாரில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில்  6 மாநில முதல் மந்திரிகள் 16 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.இக்கூட்டத்தில்

 


1.காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, 

2.தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 

3.தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், 

4.ஐக்கிய ஜனாதா தளம் சார்பில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

5.ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்

6.சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், 

7.டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், 

8.ஜார்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், 

9.மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, 

10.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, 

11.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திவாங்கர் 

12.சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே

13.காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா,

14.தேசிய மாநாட்டு கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா 

15.பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்

16.ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி

ஆகியோர் கலந்து கொண்டார்கள் மேலும் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசிக்கப்பட்டது

ேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி:-

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி தங்களுடன் இணைந்து செயல்படாமல் பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகளுடன் கை கோர்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்  மேலும் அடுத்த கூட்டத்தில் இன்னும் ஆழமாக விவாதிப்போம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பாடு இங்கிருந்து தொடங்கியுள்ளது. பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். பாஜக வரலாற்றை மாற்ற முனைகிறது, நாங்கள் வரலாற்றை காப்பாற்ற நினைக்கிறோம்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அதுதான் கடைசி பொதுத்தேர்தலாக இருக்கும் என தெரிவித்தார். 

ஆம் ஆத்மி தரப்பில்:-

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என கூறைனார் மேலும் டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான அவசரச் சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்காவிட்டால், ஆம் ஆத்மி கட்சி இதுபோன்ற எதிர்வரும் எதிர்கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் எனவும் அக்கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் முடிந்ததும் நிதிஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:-

இன்றைய கூட்டம் நல்லதொரு கூட்டமாக அமைந்தது. கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளன என்றும். பாஜகவை வீழ்த்த முதல் கூட்டத்தில் வியூகம் வகுத்துள்ளோம். என்று கூறிய அவர் அது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று கூறினார் மேலும்   அடுத்த மாதம் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் மேலும் ஒரு கூட்டம் நடைபெறும் என்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் சிம்லா கூட்டத்தில் இறுதி செய்யப்படும்" என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

ு.க.ஸ்டாலின் அவர்கள்:-

பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் சென்னை திரும்பினார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 

மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை தான் தமிழ்நாட்டில் வெற்றி பெற உதவியது இதேபோல, தேசிய அளவில் ஒற்றுமை அமைய வேண்டும் எஎந்த மாநிலத்தில் எந்த கட்சி பலமாக உள்ளதோ, அங்கு அக்கட்சியின் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும்,எனவும் பாஜக என்று சொல்வதால் ஏதோ ஒரு தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டமாக இன்று நடந்தது என்று நினைக்க வேண்டாம் ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மக்கள் காக்கப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக வேண்டும் என கூறினார் மேலும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி என்பது இருக்க கூடாது குறைந்தபட்ச செயல் திட்டங்களை உருவாக்க குழு அமைக்க வேண்டும் என்று கூறினார்

செய்தியாளர் சந்திப்பில் நான் கலந்து கொள்ளாமல் எந்த நோக்கத்தோடும் நான் வெளியேறவில்லை. நன்றி கூறும் வரை கூட்டத்தில் இருந்தேன். பின் விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக வெளியே வந்தேன்.

பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படவில்லை. மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்கு உள்ளதோ, அதன் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என கூறினார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback