Breaking News

சென்னையில் மழைநீர் தேங்கியிருந்தாலோ, மரம் முறிந்திருந்தாலோ 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் மாநகராட்சி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தாலோ, மரம் முறிந்திருந்தாலோ 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவிப்பு


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

இதனால் சென்னையில் பல இடங்களில் மழைநீர் பெருமளவில் தேங்கியுள்ளது.இதேபோல் மழையின் காரணமாக மரங்கள் விழுந்துள்ளன. இந்த மரங்கள் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் தேங்கியுள்ள மழை நீரையும் , முறிந்து விழுந்த மரங்களையும் அகற்றி வருகின்றனர்

இந்நிலையில் மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார். 

அதில், பகலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சென்னை சாலைகளில் நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யவும். எங்கேனும் தண்ணீர் தேங்கினால், அதற்கான காரணத்தை கண்டறிந்து, உடனே அதை சரி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மண்டலம்/வார்டுகளும் மழைநீர் வடிகால்களில் அடைப்புகளை சரிசெய்ய தனி குழுக்களைக் அமைத்திருக்க வேண்டும்

சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். சென்சார் அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்பு அனைத்து சுரங்கப்பாதைகளிலும் நன்றாகச் செயல்படுவதை உறுதிசெய்யவும்.

சாலைகளில் மரம் விழுந்தால் மரங்களை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்களுடன் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்”என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தாலோ, மரம் முறிந்திருந்தாலோ 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவிப்பு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback