Breaking News

கங்கை ஆற்றில் 1,710 கோடியில் கட்டபட்டு வரும் பாலம் இடிந்து தண்ணீரில் விழுந்தது.. வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

பீகார் மாநிலம் பாகல்பூரில், இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில், கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது!


பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில், சுல்தானகஞ்சை ககாரியா, சஹர்சா, மாதேபுரா மற்றும் சுபால் மாவட்டங்களுடன் ஒன்றிணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே 1710 கோடி மதிப்பில் அரசு புதிய பாலத்தை ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டி வந்தது.

இந்நிலையில் நேற்று திடீரென இந்த பாலத்தின் சில பகுதிகள் நொறுங்கி ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் சிலர் விடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு உள்ளனர். 

இந்த பாலம் இடிந்து விழுவதும் இது முதல்முறையல்ல. ஏற்கனவே இந்த பாலத்தின் ஒரு பகுதி கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி இடிந்து விழுந்தது.   இச்சம்பவத்தில் யாராவது காயமடைந்தார்களா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை

கட்டுமான பணியின் போதே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இடிந்து விழும் பாலம் வீடியோ பார்க்க:-

https://twitter.com/AmitLeliSlayer/status/1665385592660582404

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback