Breaking News

ஆகஸ்டு15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 ,ஜூலை 1 முதல் பெண்களுக்கு இலவச பேருந்து சித்தராமையா அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

ஆக.15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு!


முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் விதான்சௌதாவில் மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தலில் அறிவித்த 5 வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா 

தேர்தலின்போது மக்களுக்கு கொடுத்திருந்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசனை செய்தோம். அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நடப்பு ஆண்டிலேயே நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம். அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் கிருக லட்சுமி திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும், மாதம் 2 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும். 

ஜூலை 1ம் தேதி முதல், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

மற்ற தேர்தல் வாக்குறுதிகள் இந்த நிதியாண்டில் நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

5 வாக்குறுதிகள் என்ன

வீட்டின் குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 2,000 வழங்கப்படும்.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 மற்றும் வேலையில்லாத பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும்.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

கர்நாடகாவில் பெண்கள் பயணம் செய்ய இலவச பேருந்து டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback