Breaking News

ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வா.. மின்சார வாரியம் விளக்கம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் மீண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளிவரும் நிலையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வு அடைந்ததால், மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்து இருப்பதால், அடுத்த மாதம் முதல் கட்டணம் உயர வாய்ப்புள்ளது கடந்த ஆண்டில் மின் ஆணையம் பிறப்பித்த மின் கட்டண உயர்வு ஆணையில், 2027 ஆண்டு வரை ஆண்டுதோறும் பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம், இரண்டில் எது குறைவோ, அந்த அளவு மின் கட்டணம் ஜூலை 1 முதல் உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு ஏப்., மாதத்தில் பணவீக்க விகிதம், 4.70 சதவீதமாக உள்ளது. அதாவது, தற்போதுள்ள யூனிட் கட்டணம் எவ்வளவோ, அதில் 4.70 சதவீதம் உயரும் வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியானது

ஜூலை முதல் கட்டணத்தை உயர்த்தும் முடிவை, மின்வாரியம் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார் இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளிவரும் நிலையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback