ஸ்விக்கி உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் முழு விவரம் Swiggy Delivery Workers strike
தமிழ்நாடு முழுவதும் ஸ்விக்கி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் உணவு டெலிவரி செய்வதில் முக்கிய நிறுவனமாக ஸ்விக்கி திகழ்கிறது.
தமிழகத்தில் இருக்கக்கூடிய ஸ்விக்கி ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் வரை இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். புதிய ஸ்லாட்டு முறை திரும்ப பெற வேண்டும், ஏற்கெனவே வழங்கி வந்த டர்ன் ஓவர் தொகையை மீண்டும் வழங்க வேண்டும். ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் வழங்க வேண்டும். ஆர்டர் எடுக்கும் போது ஒரு ஆர்டருக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விக்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தற்போது, இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஸ்விகி ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால், உணவு டெலிவரி சேவை பாதிக்கப்படவுள்ளது.
Tags: தமிழக செய்திகள்