FACT CHECK தெர்மாகோல் வைத்து சர்க்கரை தயாரிக்கும் இயந்திரம் என பரவும் வீடியோ உண்மையா? முழு விவரம் thermocol sugar fake or real
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் தெர்மாகோல் வைத்து சர்க்கரை தயாரிக்கின்றார்கள் எதைதான் நம்புவது என ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியதில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள தகவலில் உள்ளது போல் அது சர்க்கரை கிடையாது
அந்த இயந்திரம் தெர்மாகோல் ரீசைக்கில் செய்யும் இயந்திரம் ஆகும் என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
முழு விவரம்:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவினை பற்றி யூடியூப்பில் thermocol recycling plant என்று சர்ச் செய்தால் அந்த இயந்திரம் பற்றி பல வீடியோக்கள் உள்ளது
தெர்மாகோலை மறு சுழற்ச்சி செய்து பிளாஸ்டிக் துகள்களாக மாற்றும் இயந்திரம் அதில் இறுதியாக வரும் தெர்மாகோல் துகள்களாக மறுபயன்பாட்டிற்கு மாற்றுகிறது.
அந்த துகள்கள் நாற்காலிகள், மேசைகள், பொம்மைகள், அலங்கார பொருட்கள் மற்றும் பிற பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
அந்த இயந்திரத்தில் தெர்மாகோல் போட்டதும் அதில் உள்ள வெப்பத்தால் அது தெர்மாகோல் கூழாக மாறுகின்றது
அதன் பின்பு அது இழைகளாக மாறி தண்ணீருக்கு செல்கின்றது அதன்பின்பு இறுதியாக அது சிறு துகள்களாக வெட்டி மூட்டையாக வைக்கப்படுகின்றது
அந்த தெர்மாகோல் மறு சுழற்சி இயந்திரம் கொண்டு சிறு தொழில் செய்யும் வணிக வியாபாரம் ஆகும் ,
ஆனால் யாரோ அந்த இயந்திரத்தில் இறுதியாக வரும் தர்மாகோல் துகள்களை சர்க்கரை என பொய்யாக ஷேர் செய்கின்றார்கள்
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=BsVEqVj6LEA&t=281s
Tags: FACT CHECK மறுப்பு செய்தி