Breaking News

உலகம் முழுவதும் கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்தது!! உலக சுகாதார மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அட்மின் மீடியா
0

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று அவசர நிலையாக அறிவிக்கப்பட்டது. 


இதையடுத்து உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு அறிவித்தன.கொரோனாவின் கோர தாண்டவத்தால், உலகம் முழுவதும் இதுவரை  70 லட்சம் பேர் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முதல் அலை, இரண்டாம் அலை என வரிசையாக கொரோனாவின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருந்தது.  

அதன்பின்பு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டது இதனால் கொரானா பரவல் கட்டுக்குள் வந்தது அதன்பின்பு  ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். 

.சுமார் 3 ஆண்டுகளாக அமலில் இருந்த கொரோனா அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.  கொரோனாவின் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது

இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback