Breaking News

இணையத்தில் வைரல் ஆகும் புதிய நாடாளுமன்றத்தின் வீடியோ

அட்மின் மீடியா
0

இந்திய நாடாளுமன்றத்திற்க்கு புதிய கட்டடம் வரும் 28-ந் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் இந்நிலையில் அதன் வீடியோவை பிரதமர் வெளியிட்டுள்ளார்

முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட இந்த நாடாளுமன்ற கட்டிடம் 1,200 பேருக்கு மேல் அமரும் வசதியுடன் இருக்கும். கட்டிடத்தில் சட்டமன்றத்திற்கான பெரிய அறைகள் இருக்கும். மேலும் இதில் நாடாளுமன்ற மக்களவையில் 888 இருக்கைகளும், மாநிலங்களவையில் 324 இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளது. தற்போது மக்களவையில் 543 பேரும், மாநிலங்களவையில் 245 பேரும்தான் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில் வரும் நாட்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதால் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

புதிய நாடாளுமன்றம் 64,050 சதுர மீட்டர் பரப்பளவில் மக்களவை, மாநிலங்களவைகளுடன் எம்பிக்களுக்கான ஓய்வு அறை, பெரிய நூலகம், நாடாளுமன்ற குழுவினருக்கான அறைகள், உணவருந்தும் பகுதிகள், வாகன நிறுத்துமிடம் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. 

இதில் முக்கியமாக லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோல் வைக்கப்பட இருக்கிறது. 


வீடியோ பார்க்க:-

https://twitter.com/narendramodi/status/1662069125257269252


new parliament building 

new parliament house 

new indian parliament building 

new parliament building 

interior new parliament of india 

new parliament building design 

new parliament building built by india 

new parliament design 

new parliament building construction 

new parliament building india design


Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback