Breaking News

தமிழக அமைச்சரவையில் மாற்றம் பால்வளத்துறையிலிருந்து நாசர் விடுவிப்பு அமைச்சராகிறார் டி.ஆர்.பி. ராஜா முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகராப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது முதல்வரின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இந்த அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 



அதன்படி பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்.அதன்படி அவருக்கு பதிலாக மன்னார்குடி சட்டமன்ற தொகுதியை சார்ந்த டி.ஆர்.பி. ராஜாaமைச்சர் ஆகின்றார்

டிஆர்பி ராஜா எந்த துறைக்கான அமைச்சர் என்று விரைவில் தெரிவிக்கப்படும் என தெரிகின்றது

அவர் வரும் 11ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.இதுகுறித்த ஆளுநர் ஒப்புதலை தொடர்ந்து இதற்கான அறிவிப்பினை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆண்டு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்தமுறை  உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது பால்வாரத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்

டிஆர்பி.ராஜா

திமுக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி ஆர் பாலுவின் மகன் டிஆர்பி.ராஜா திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக உள்ளார்

மன்னார்குடி சட்டமன்ற மன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார்

மேலும் கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback