அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் சந்தித்தார்
ஓ.பன்னீர்செல்வத்துடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் செல்கிறார்.இன்று நடைபெறும் சந்திப்பில் இணைந்து செயல்படுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவ, டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணைந்து செயல்படத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ம
ுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு முதல்வர் பதவியை சசிகலா ஏற்க இருந்தது. இதற்காக ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதன்பின்பு தர்ம யுத்தம் செய்து ஆட்சியை ஆட்டம் காண வைத்தார் சசிகலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன் காரணமாக அவர் சிறைக்கு செல்வதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்தார். இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற தொடங்கினர்
கடந்த நான்கு ஆண்டுகளாக இரட்டை தலைமையாக அதிமுக இயங்கி வந்தது. சமீபத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.
ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இன்று டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீசெல்வம் சந்தித்துள்ளார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்