தி கேரளா ஸ்டோரி படத்துக்கான தடை நீக்கம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்குவங்க மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டதை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளுக்கிடையில் கடந்த 5ம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது
இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளார்கள் என இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழகத்தில் இந்த படத்துக்கு எதிர்ப்பு இருந்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில் மால்களிலும் படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது
மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான மத்தியப்பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அளித்து அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மீது உத்தரவிட்டார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாநிலத்தில் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மேற்கு வங்கத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடை செய்யக்கூடாது எனவும் கூறியுள்ளனர்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்தி