Breaking News

வட்டார மேலாளர்கள் பணிக்கு பட்டபடிப்பு படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள 2 வட்டார மேலாளர்கள் பணிக்கு பட்டபடிப்பு படித்த பெண்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தென்காசி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்



கல்வி தகுதி:-

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி 

கணிணி MS Office இல் குறைந்தபட்சம் 6 மாத காலம் படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

கணினி அறிவியலில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:-

விண்ணப்பதாரர்கள், 01.01.2023 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:-

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்படும் தகுதியான நபர்கள் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவர். பணித்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் தொடர்ந்து பணியிl ஈடுபடுத்தப்படுவது தொடர்பாக ஒப்பந்தகாலம் புதுப்பிக்கப்படும். 

தென்காசி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள மேற்குறிப்பிட்ட வட்டார இயக்க மேலாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 02.06.2023-க்குள் அனுப்பி பயன்பெறுமாறு தென்காசி மாவட்ட திரு.துரை.ரவிச்சந்திரன்.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2023/05/2023051945.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback