Breaking News

ஒருவர் பெயரில் எடுத்த ரயில் டிக்கெட்ல வேறு ஒருவர் பயணிக்கலாம்...எப்படி !முழு விபரம்..

அட்மின் மீடியா
0
பொதுவாக ரயில் டிக்கெட் யாருடைய பெயரில் நாம் முன்பதிவு செய்கின்றோமோ அவர்கள் தான் பயனம் செய்யவேண்டும் வேறு நபர் பயனம் செய்ய முடியாது


ஆனால் நீங்கள் டிக்கெட் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு, சில காரணங்களால் பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தால், உங்கள் குடும்பத்தில் உள்ள எவரும் அந்த ரயில் டிக்கெட்டில் பயணம் செய்யலாம். அதற்க்கு உங்கள் டிக்கெட்டில் வேறு ஒருவரை நீங்கள் பயணிக்க அனுமதிக்கிறீர்கள் என்பதை ரயில்வேக்கு தெரிவிக்க வேண்டும். 

சுருக்கமாக சொல்வதானால், உறவினர் திருமணத்திற்கு செல்வதாக திட்டமிட்டிருந்தீர்கள் கடைசி நேரத்தில் உங்களுடைய அலுவலக வேலை நிமித்தமாக நீங்கள் செல்ல முடியாவிட்டாலும், உங்கள் சார்பாக குடும்பத்தில் ஒருவரை அனுப்பி வைப்போம் இல்லையா? அது போல குடும்பத்தினர் யார் வேண்டுமானாலும் உங்கள் டிக்கெட்டில் பயணிக்கலாம்...


என்ன செய்யவேண்டும்:-

ரயில் புறப்படும் 48 மணி நேரத்திற்கு முன், உங்கள் அருகிலுள்ள ரயில் நிலையத்தின் ரயில்வே கவுன்டருக்குச் சென்று உங்கள் டிக்கெட்டை மற்றொரு உறுப்பினரின் பெயருக்கு மாற்ற வேண்டும். என்று சொல்லுங்கள்

அவர்கள் கொடுக்கும் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்

டிக்கெட்டை மாற்றும் போது, யாருடைய பெயரில் டிக்கெட் மாற்றப்படுகிறதோ அந்த நபரின் ஆதார் அட்டையையும் வைத்திருக்க வேண்டும். 

இதன் பிறகு, பயணச்சீட்டில் சம்மந்தப்பட்ட பயணியின் பெயர் மாற்றப்பட்டு, யாருடைய பெயரில் டிக்கெட் மாற்றப்பட்டதோ அந்த உறுப்பினரின் பெயரில் புதிதாக டிக்கெட் தரப்படும் அவர் ரயிலில் பயணம் செய்யலாம்.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback