Breaking News

2 ஆண்டுகள் பயன்படுத்தாத கூகுள் அக்கவுண்ட் நீக்கப்படும் என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கூகுள் கணக்கு வைத்துள்ளவர்கள் தனது ஜி மெயில் அக்கவுன்ண்டை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்தால் அவற்றை நீக்க கூகுள் திட்டமிட்டுள்ளது. 


 

கூகுள் நிறுவனம் தனது கூகுள் அக்கவுண்ட்டை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் இன்-ஆக்டிவ்வாக வைத்திருந்தால் அந்த அக்கவுண்ட் டெலிட் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் இது தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்டிற்கு மட்டுமே பொருந்தும் என்றும் பிசினஸ், பள்ளி, நிறுவனங்கள் போன்ற அக்கவுண்ட்டிற்கு பொருந்தாது என்று தெரிவித்துள்ளது.மேலும் இதற்க்கு டிசம்பர் 2023 வரை கால அவகாசம் வழங்கி உள்ளது. அதற்குள் தங்கள் அக்கவுண்டை ஆக்டிவ் செய்ய வேண்டும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் பயனர்கள் தங்கள் கூகுள் கணக்குகளை 2 ஆண்டுக்குள் ஒரு முறையேனும் லாக்-இன் செய்து ரிவ்யூ செய்ய வேண்டும்.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback