12ம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதம் மாவட்டம் வாரியாக முழு விவரம்
இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இதனையடுத்து இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
அதில் இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகளில் 96.38% பேரும், மாணவர்களில் 91.45% பேரும் தேர்ச்சி என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 7,55,451 - 94.03%
மாணவியர் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர்
மாணவர்கள் 3,49,697 (91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர்
மூன்றாம் பாலினத்தவர் 1 (100.00%) தேர்ச்சி
இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் .
+2 பள்ளி தேர்ச்சி விகித அடிப்படையில்
விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
கடைசி இடத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளது.
விருதுநகர் 97.85 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
திருப்பூர் மாவட்டம் 97.79 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில்
உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் 97.59 சதவீதத்துடன் 3ஆம் இடத்தில் உள்ளது.
கோவை மாவட்டம் 97.57 சதேவீதத்துடன் 4 ம் இடத்தில் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் 97.37 சதவீதத்துடன் 5 ம் இடத்தில் உள்ளது.
சிவகங்கை மாவட்டம் 97.26 சதவீதத்துடனும், 6ம்இடத்தில் உள்ளது.
கன்னியகுமரி மாவட்டம் 97.05 சதவீததுடன் 7 ம் இடத்தில் உள்ளது.
சென்னை 94.14 சதவீதத்துடன் 8 ம் இடத்தில் உள்ளது.
ராணிப்பேட்டை 87.30 சதவீதத்துடன் கடைசி இடம் பிடித்துள்ளது.
அரசு பள்ளியில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக திருப்பூர் அமைந்துள்ளது.
முக்கியப் பாடங்களில் 100 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை பற்றிய விவரம் தற்போது வெளியிடபட்டுள்ளது.
அதன்படி,
தமிழ் தேர்வில் 2 பேர் ,
ஆங்கிலத்தில் 15 பேர்,
இயற்பியல் 812 பேர்,
வேதியியல் 3,909,
உயிரியல் 1,494 பேர்,
கணிதம் 690 பேர்,
தாவரவியல் 340 பேர்,
விலங்கியல் 154 பேர்,
கணினி அறிவியல் 4,618 பேர்,
வணிகவியல் 5,678 பேர்,
கணக்குப் பதிவியல் 6,573 பேர்,
பொருளியல் 1,760 பேர்,
கணினிப் பயன்பாடுகள் 4,051 பேர்
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 1,334
என மொத்தமாக 32,501 மாணவ, மாணவியர்கள் 100
சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்
Tags: கல்வி செய்திகள்