Breaking News

ஒரே வாட்ஸ் அப் கணக்கை நான்கு மொபைலில் பயன்படுத்தலாம் புதிய அப்டேட் whatsapp multiple devices

அட்மின் மீடியா
0

இன்று முதல் ஒரே Whatsapp கணக்கை நான்கு மொபைலில் பயன்படுத்தலாம் என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் அறிவிப்பு

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது அதன்படி இனி உங்கள் ஒரே ஒரு வாட்ஸ்அப் கணக்கை நான்கு மொபைல்களில் நீங்கள் பயன்படுத்தலாம். 

ஒன்றிற்கும் மேற்பட்ட மொபைல் ஃபோன்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் வசதியை இன்று முதல் பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு ஃபோன்களில் ஒரே நேரத்தில் வாட்ஸப் பயன்படுத்தும் வசதி வழங்கப்படிருந்த நிலையில், இப்போது நான்கு ஃபோன்களில் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.அதாவது இனிமேல், ஒரு எண்ணில் உள்ள வாட்ஸப் கணக்கை நான் ஃபோன்களில் லாக்-இன் செய்யலாம்., மெசேஜ் சிங் ஆப்சனும் வழங்கப்பட்டுள்ளது.

பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை நான்கு சாதனங்களில் இணைக்க முடியும். போன் ஆஃப்லைனில் இருந்தாலும் நீங்கள் உபயோகிக்க முடியும்

நான்கு போன்களில் வாட்ஸ்அப் லின்க் செய்வது எப்படி?

முதலில் பிளே ஸ்டோர் சென்று உங்கள் வாட்ஸப்பை அப்டேட் செய்யுங்கள்

அடுத்து உங்கள் வாட்ஸப் செல்லுங்கள் 

அதில் Settings  சென்று அதில் உள்ள Linked Devices ஆப்ஷன்களை கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்

அடுத்து வாட்ஸ்அப் வெப் வலைத்தளத்தை பிரவுசரில் திறந்து அதில் தெரியும் கியூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யுங்கள்

இது போல் நீங்கள் நான்கு சாதனங்களில் உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ லின்க் செய்ய முடியும். 

எப்போது வேண்டுமானாலும், எந்த சாதனத்தில் இருந்தும் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ அன்-லின்க் செய்து விடலாம்.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback