யுரேனஸ் கிரகத்தின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா uranus pictures nasa
அட்மின் மீடியா
0
யுரேனஸ் கிரகத்தின் (இராகு) புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மூலம் சூரிய குடும்பத்தின் 7வது கிரகமான இராகு கோள் என்கின்ற யுரேனஸின் தெளிவான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் உதவியுடன் யுரேனஸ் கிரகத்தின் 13 வளையங்களில் 11 வளையங்களை தெளிவாக படம் எடுத்துள்ளது. இவை எல்லாம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது ,மேலும் இந்த வளையங்களுடன் யுரேனஸ் கிரகத்தின் 6 நிலவுகளும் படம் எடுக்கப்பட்டுள்ளது.
நீல நிறத்தில் பிரகாசமாக காணப்படும் யுரேனஸை சுற்றி பல வளையங்கள் காணப்படுகின்றன. சூரியனில் இருந்து ஏழாவது கிரகமாக உள்ள யுரேனஸ் தனித்துவமானது. யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றிவர 84 வருடங்கள் ஆகின்றது.விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் இயுரேனசின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இது தன்னைத் தானே சுற்றி வர 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். அப்படியென்றால் இயுரேனசில் ஓர் ஆண்டு என்பது பூமியில் 43,000 நாள்கள் ஆகும்.
யுரேனஸ் கோளின் புகைப்படத்தை அதன் வளையங்களுடன் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பதிவு செய்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்