RTE கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் rte application form 2023-24 tamil nadu
25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் இலவசமாக படிக்க விண்ணப்பிக்க தேதி வெளியிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டம் சட்டத்திருத்தம் 2009இன் படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதில், பயிலும் மாணவர்களுக்கு அரசே கல்வி செலவை ஏற்கும். இதற்கு மாணவரின் புகைப்படம், ஆதார், சாதி சான்று, பெற்றோர்களின் அடையாள ஆவணங்கள், வருமான சான்று உள்ளிட்டவை கொண்டு இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.2023- 2024 கல்வியாண்டில் புதியதாக எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் மாணவர்கள் சேர விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி , ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி தொடங்கி மே மாதம் 18ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தபட்டுள்ளது.
RTE
சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு வரும் ஏப்ரல் 20 ம் தேதி முதல் மே மாதம் 18 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரிவிக்கப்பட்டுள்ளது
கட்டாய
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி
மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சுமார் 25% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமே
கட்டாய கல்வி உரிமை சட்டமாகும்
.
இந்த சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை இச்சட்டத்தின் மூலம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கலாம்.
இச்சட்டத்தின் மூலம் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புவோர்கள் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம்.
ஒவ்வொரு பள்ளிகளிலும் 25% ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை என்பது கட்டாயமானது. இதற்கான கட்டணத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
குழந்தையின் புகைப்படம்.
குழந்தையின் ஆதார் அட்டை
குழந்தையின் சாதி சான்றிதழ்
தந்தையின் வருமான சான்றிதழ்.
பெற்றோர்களின் ஆதார் அட்டை.
குடும்ப அட்டை
RTE விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் பள்ளிக்கல்வித் துறையின் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அடுத்து வரும் பக்கத்தில் Start Application என்பதை கிளிக் செய்யவும்.
அதன்பின்பு விண்ணப்பத்தில் மாணவரின் விவரங்கள், பெற்றோர் விவரங்கள், முகவரி, என அனைத்தையும் பதிவு செய்யுங்கள்
அடுத்து உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள நீங்கள் சேர்க்க விரும்பும் தனியார் பள்ளியைத் தேர்வு செய்ய வேண்டும்.
பள்ளியைத் தேர்வு செய்து விண்ணப்பத்தை முழுவதுமாக நிரப்பிய பிறகு சமர்ப்பி என்பதை அழுத்தவும்.
அடுத்து உங்கள் தொலைப்பேசிக்கு ஒரு பதிவு எண் குறுந்தகவல் மூலம் அவ்வளவுதான்
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்;-
RTE சட்டம், 2009 தனியார் பள்ளிகளில் 2023 - 2024 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
குழந்தைகளுக்கான
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப்பிரிவு
12(1)(சி) இன்படி 2023 24ஆம் கல்வியாண்டிற்கு 25% இட ஒதுக்கீட்டின் கீழ்
வாய்ப்பு - மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு
சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் அதாவது
எல்.கே.ஜி.முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல். கே.ஜி வகுப்பிலும், 1ஆம்
வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பிலும் சேர்க்கைக்கு
20.04.2023 முதல் 18.05.2023 வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம்
விண்ணப்பிக்கலாம்.
18.05.2023 வரை பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்மந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையிலும் 21.05.2023 அன்று மாலை 5.00 மணிக்கு வெளியிடப்படும்.
ம
ேற்காண்
திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள்
01.08.2019 முதல் 31.07.2020 க்குள்ளாகவும், ஒன்றாம் வகுப்பிற்கு
விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2017 முதல் 31.07.2018க்குள்ளாகவும்
பிறந்திருக்க வேண்டும்.
பெற்றோர்கள் / விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ்களை உரிய அலுவலரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.
1. பிறப்புச் சான்றிதழ்.
2. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ்.
3. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்.
4. நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2
இலட்சத்திற்கும் கீழ் உள்ள வருமானச் சான்றிதழ்.
5. இருப்பிடச்சான்று,
பெற்றோர்கள் / விண்ணப்பத்தாரர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்டக் கல்வி அலுவலர்/ வட்டாரக் கல்வி அலுவலர்/ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய அலுவலங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்கத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிர்ணயிக்கப்பட்ட
இடங்களைவிடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்மந்தப்பட்ட
பள்ளியில் 23.05.2023 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான
குழந்தைகள் தெரிவு செய்யப்படுவர். சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்ட
குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் 24.05.2023 அன்று இணைய
தளத்திலும் மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும்
வெளியிடப்படும்.
ச ேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளை 29.05.2023 க்குள் சம்மந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும்
.
மேலும் விவரங்களுக்கு:-
https://tnschools.gov.in/wp-content/uploads/2023/04/PRESS-RELEASE-RTE-Admissions.pdf
மேலும் விவரங்களுக்கு:
14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
tamilnadu rte school admission
TN RTE Admission 2023
RTE Tamilnadu Admission 2023 Online Registration
RTE Tamil Nadu Admission 2023-34 Apply Online
rte tamilnadu
rte tamilnadu admission 2023-24
rte tnschools
rte tnschools gov in online application
rte 2022 to 2023 tamil nadu
rte admission 2023-24 tamil nadu
rte application form 2023-24 tamil nadu
rte application form 2023-24 tamil nadu
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்