Breaking News

சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்டில் இலவச இப்தார் இந்திய முஸ்லீம்களுக்கு இல்லை என கூறிய கடை ஊழியர் முழு விவரம் India cannot take only malay

அட்மின் மீடியா
0

சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்டில் இலவச இப்தார் இந்திய முஸ்லீம்களுக்கு இல்லை என கூறிய கடை ஊழியர் முழு விவரம் India cannot take only malay

சிங்கப்பூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இந்திய முஸ்லிம்களுக்கு ரம்ஜான் நோன்பு திறப்புக்கான உணவு மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையாகி உள்ளது, அதனை தொடர்ந்து சூப்பர் மார்க்கெட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது

சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மலாய் மொழி பேசும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ரமலான் மாதம் என்பதால் அங்கு வரும் இஸ்லாமியர்களுக்காக நோன்பு திறப்புக்காக பேரிச்சம்பழம், உலர் திராட்சை, குளிர்பானங்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

ரமலான் காலத்தில் முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு சிற்றுண்டிகள் அல்லது பேரீச்சம்பழங்களுடன் கூடிய இலவச பானங்களை வழங்குகிறது.

முஸ்லீம் வாடிக்கையாளர்களுக்கு பானங்கள் மற்றும் மைலோ பாக்கெட்டுகள், இப்தாருக்கு 30 நிமிடங்களுக்கு முன்னும் பின்னும், ரமழானில் மாலை தொழுகைக்குப் பிறகு எடுக்கப்பட்ட உணவு வழங்கப்படுகிறது.அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே சென்று அந்த உணவு பொருட்களை எடுத்து நோன்பு திறந்துகொள்ளலாம். 

இந்தியாவைச் சேர்ந்தவர் ஜாபர் சாலிஹ் அந்த நாட்டை சேர்ந்த பெண்ணை (அதாவது மலாய் ) அவரது மனைவி பாரா நதியா மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்தனர் நோன்பு திறக்கும் நேரம் வந்ததால் நோன்பு திறக்க வைக்கப்பட்டு இருந்த இடத்தில் இருந்து உணவு பொருட்கள் எடுத்தார் அச்சமயம் அங்கு வந்த ஒரு ஊழியர், இந்த உணவு பொருட்கள் இந்திய முஸ்லிம்களுக்கு இல்லை. மலாய்காரர்களுக்கு மட்டுமே' என, ஜாப்பரிடம் கூறினார். 

இதன்பின் அங்கிருந்த வெளியேறிய ஜாபர் தம்பதியினர் இந்த விஷயம் குறித்து தனது சமூக வலைதளத்தில் ஜாபர் அவர்களின் மனைவி கவலை தெரிவித்திருந்தார்

இந்த சம்பவம் எனக்கும், எனக்கும் எனது கணவருக்கும் மிகுந்த மன உளைச்சலை அளித்துள்ளது.எதற்காக நமக்கு ரம்ஜான் உணவு தர மறுத்தனர் என என் குழந்தை கேட்ட கேள்விக்கு, என்னால் பதில் அளிக்க தெரியவில்லை. என் குழந்தைகளை நான் சமாதானப்படுத்தினேன். என குறிப்பிட்டு இருந்தார்

அவர் கூறிய அந்த விஷயம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது மேலும் பலரும் அந்த சூப்பர் மார்க்கெட் பற்றி விமர்சனம் செய்தனர்

இந்நிலையில் முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இலவச சிற்றுண்டிகள் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே என்று அதன் ஊழியர் ஒருவர் வலியுறுத்தியதையடுத்து, முஸ்லிம் தம்பதியரிடம் மன்னிப்புக் கோரியுள்ளது சூப்பர் மார்க்கெட் நிறுவனம்.

ஜாபர், நதியா தம்பதிக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நாங்கள் எங்கள் ஊழியருக்கு அறிவுரை வழங்கினோம். ரமலான் காலத்தில் அனைத்து முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கும் இப்தார் இலவசமாக வழங்கப்படுகின்றன என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம் என சூப்பர் மார்க்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback