Breaking News

Fact Check மெக்கா காபாவில் கரப்பான் பூச்சி படையெடுப்பு என பரவும் வீடியோ உண்மை என்ன Cockroaches Invade Mecca?

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இன்று மக்காவில், ஒரு மின்னல்..வந்த லட்சக்கணக்கான மக்கள் மீதும் விழுந்தது.  மழை நின்ற ஒரு நிமிடத்தில், பூமிக்கு அடியில் இருந்து லட்சக்கணக்கான கரப்பான் பூச்சிகள் வெளியே வந்ததால், தொழுகையை நிறுத்திவிட்டு அனைவரும் சென்றுவிட்டனர் என ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-

சவூதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான பெரிய மசூதியை கரப்பான் பூச்சிகள் தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ தற்போது நடந்தது இல்லை என்றும் 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 01.11.2019 அன்று நடந்தது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-

உலகின் புனிதமான முஸ்லிம் தளமான மெக்காவில் 01.11.2019 அன்று சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை  தற்போது நடந்தது என ஷேர் செய்து வருகின்றார்கள்

இது குறித்து சவூதி கெசட் வெளியிட்டுள்ள செய்தியில்

01.112019 அன்று சவூதியில் பெய்த கனமழையை தொடர்ந்து black grasshopper என்ற வெட்டுக்கிளிகள் இஷா தொழுகைக்கு பிறகு புனித காபாவில் வரதொடங்கியது

உடனடியாக மக்கா நகராட்சியின் சிறப்புக் குழுக்கள் மசூதியில் உள்ள அவர்கள் பூச்சிகளின் மாதிரிகளை எடுத்து அவற்றை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்

மசூதிக்குள் கரப்பான் பூச்சிகள் மேலும் பரவாமல் தடுக்க  சீசர் மோப் என்ற புதிய உபகரணத்தை கொண்டு அந்த கரப்பான் பூச்சிகள் கொல்லப்பட்டது

அந்த புதிய கரப்பான் பூச்சி உபகரணம்  பூச்சிகளை ஒரு இடத்திற்கு ஈர்க்கிறது, அங்கு பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது மேலும் பள்ளியில் வாசனை திரவியம் தெளிக்கப்பட்டது என செய்து வெளியிட்டு இருந்தது.

மேலும் மெக்காவில் அந்த வெட்டுக்கிளிகளை தூய்மை படுத்தும் பணியையும் காபாவின் அதிகாரபூர்வ டிவிட்டர் தளத்திலும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தார்கள் 

முடிவு:-

ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://saudigazette.com.sa/article/553688

https://www.youtube.com/watch?v=6guOuPzMxTQ

Tags: FACT CHECK மறுப்பு செய்தி மார்க்க செய்தி

Give Us Your Feedback