Breaking News

பொது இடங்களில் உங்கள் போனை சார்ஜ் செய்யாதீர்கள் உங்கள் தகவல்கள் திருடப்படலாம் முழு விவரம் Don't Charge Your Mobiles In Public Places | Juice jacking tamil

அட்மின் மீடியா
0

பொது இடங்களில் செல்போன் சார்ஜ் போடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். விமான நிலையங்கள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களில் இருக்கும் USB சார்ஜிங் வசதியை பயன்படுத்த வேண்டாம். காரணம் தெரியுமா


 ஸ்மார்ட் போன் சார்ஜ் :-

பொது மக்கள் வெளியில் பயணம் செய்யும் போது பொது இடங்களில் உள்ள சார்ஜிங் பாய்ண்ட்களில் போனை சார்ஜ் செய்வது வழக்கமான ஒன்றாகும்

ஏர்போர்ட்டுகளில் சார்ஜ் செய்யும்போது கவனம் தேவை என அறிவுறுத்தியிருக்கிறது. இந்தியாவிலும் ரயில் நிலையங்கள் மற்றும் ஏர்போர்ட்டுகளில் சார்ஜிங் வசதி உள்ளது. மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் பொது சார்ஜிங் வசதிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. அங்கு சார்ஜிங் செய்யும்போது கவனமாக முன்னெச்சரிக்கை செய்து கொள்வது அவசியம்

ஜூஸ் ஹேக்கிங்

ஜூஸ் ஜாக்கிங்  என்பது மின்னேற்றும் போது தீப்பொருளைப் பரப்பி சைபர் தாக்குதலை உண்டாக்குதலாகும்.

பொதுவாக விமான நிலையம், இரயில் நிலையம், வணிக வளாகம், விடுதி போன்ற மக்கள் கூடும் பொது இடங்களில், தங்கள் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய  யூ.எஸ்.பி போர்ட் இருக்கும்

ஆனால் அங்கு சார்ஜர் இருக்காது சார்ஜர் ஒயர் மட்டும் இருக்கும் இதனை பயன்படுத்தி சார்ஜ் செய்து கொள்வார்கள்

ஆனால் செல்போன் சார்ஜிங் ஸ்டேஷன், யூ.எஸ்.பி பவர் ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்வதால் சைபர் மோசடியில் ஈடுபடுபவர்கள் மக்கள் போனில் இருந்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருட முயற்சிக்கலாம்

யூ.எஸ்.பி சார்ஜிங் கனெக்டர்கள் மூலம் ஹேக்கர்கள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் "மால்வேர் வைரஸ் அணுப்பி உங்கள் மொபைல் இருந்து அவர்களால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் முதல் வங்கிக் கணக்கு வரை அனைத்து தகவல்களையும் திருட முடியும் இவை அனைத்தும் உங்களுக்கு தெரியாமலேயே நடக்கும் என்பதுதான் இதன் சிறப்பம்சம் இத்தகைய திருட்டில் குற்றவாளிகளை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. 

 

ஜூஸ் ஜாக்கிங் தடுக்க நான் என்ன செய்ய முடியும்?

உங்கள் சொந்த சார்ஜரைக் பயனத்தின் போது கொண்டு செல்லுங்கள் அதையே உபயோகிங்கள்

பவர் பாங்க்கை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் 

பொதுவிடங்களில் உள்ள யூ.ஏஸ்.பி.யைப் பயன்படுத்தும் முன் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொது இடங்களில் USB இருக்கும் சார்ஜிங் போர்ட்களை பவர் பேங்க் களை சார்ஜ் செய்வதற்கு மட்டும் பயன்படுத்தலாம்.

பொது இடங்களில் USB சார்ஜிங் போர்ட்களுக்கு பதிலாக மொபைல் சார்ஜர்களையே பயன்படுத்த வேண்டும்.

தற்போது Charge only கேபிள்கள் கிடைக்கின்றன வெளியில் சென்றால் அதன் மூலம் சார்ஜ் செய்து கொள்ளுங்கள்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback