சென்னை உயர் நீதிமன்றத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் அதிரடி உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் உயர்நீதிமன்ற உதவி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 469 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் உயர்நீதிமன்ற உதவி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்