Breaking News

வாட்ஸப்பில் பார்வர்ட் செய்த மெசெஜ்களை எடிட் செய்யலாம் புதிய அப்டேட்

அட்மின் மீடியா
0

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்பில் பயனாளர்களை கவரும் விதமாக அடுத்தடுத்து பல்வேறு புதிய அப்டேட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த அப்டேட்கள் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்


தற்போது நாம் வாட்ஸ் அப்பில் ஏற்கனவே அனுப்பிய மெசஜை குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாம்  அனுப்பிய மெசஜ்களில் ஏதேனும் தவறு இருந்தால் நாம் அதனை டெலிட் செய்து விடலாம். 

இந்நிலையில் தற்போது நாம் அனுப்பிய மெசஜை  டெலிட் செய்யாமல் அதனை எடிட் செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் நாம் அனுப்பிய மெசஜ்ஜை 15 நிமிடத்திற்குள் எடிட் செய்துகொள்ளலாம், இதனால் நாம் அனுப்பிய மெசஜை டிலைட் செய்யும் அவசியம் இருக்காது 

மேலும் தற்போது பார்வேர்ட் மெசேஜ்களில் எடிட் செய்யும் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி வாட்ஸ் அப்பில் இமேஜ் மற்றும் வீடியோக்களோடு சேர்த்து அனுப்பப்படும் கேப்ஷன்களை மறுமுறை ஷேர் செய்யும் போது அதனை தங்கள் வசதிக்கேற்ப எடிட் செய்து அனுப்பலாம். 

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback