இந்தியாவில் இருந்து இறால் இறக்குமதிக்கு தற்காலிக தடை விதித்த சவுதி அரேபியா
சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் SFDA இந்தியாவில் இருந்து இறால் இறக்குமதிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் இந்தியாவில் இருந்து இறால் இறக்குமதிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த இறால் பொருட்களில் வெள்ளை புள்ளி நோய்க்குறி வைரஸ் (WSSV) இருப்பதைக் கண்டறிந்த பிறகு இந்த தடை செய்யப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள மீன்வளத்திற்கு WSSV பரவாமல் இருக்க, ராஜ்யத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்திய தரப்பு போதுமான உத்தரவாதங்களை வழங்கும் வரை தடை தொடரும் என்று SFDA கூறியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் இறால் உள்ளிட்ட கடல்
பொருட்களின் மாதிரிகளை சேகரிக்க சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய
அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது என சவூதி அரேபியாவின் சவூதி கெசட் செய்தி வெளியிட்டுள்ளது
சவூதி கெசட் செய்தி பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள்