குஜராத்தில் பயங்கரம் தனக்கு தானே தலையை வெட்டி நரபலி கொடுத்துகொண்ட தம்பதியினர்
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள விஞ்சியா எனும் கிராமப் பகுதியில் ஹெமுபாய் மக்வானா (38), ஹன்சாபென் (35) தம்பதியினர் வசித்து வந்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் வீட்டில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வீட்டில் நரபலி பூஜை ஒன்றை நடத்தியுள்ளார்கள் இந்நிலையில் நேற்று காலையில் அந்த குடிசையில் இருவரும் தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்தனர். இது குறித்து போலிசாருக்கு தகவல் அளித்தார்கள் கிராமவாசிகள் அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தம்பதியர் இருவரும் தங்களது தலையை தாங்களே இயந்திரத்தின் உதவியால் தலையை வெட்டிக் கொண்டு நரபலி கொடுத்துக் கொண்டது தெரிய வந்துள்ளது.
இருவரின் தலையையும் கயிற்றால் கட்டி அந்த இயந்திரத்தை வைத்து கயிற்றைத் தளர்த்தினால் தலை தானாக துண்டாகி யாக குண்டத்தில் சரியாக விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தம்பதியர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் ஒன்றை கைப்பற்றிள்ளார்கள் மேற்கொண்டு விசாரனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது
Tags: இந்திய செய்திகள்