Breaking News

அல்-அக்ஸா மசூதிக்குள் தொழுகையில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ்!

அட்மின் மீடியா
0

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனித தளமான அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைந்த, இஸ்ரேல் போலீஸ் படை, அங்கே இருந்த இஸ்லாமியர்களை வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இஸ்லாமியர்களுக்கு மெக்கா, மதீனாவிற்கு அடுத்து மூன்றாவது புனித தளமாக அல்-அக்ஸா மசூதி கருதப்படுகிறது. இஸ்ரேல் யூதர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாகும். அதேபோல பாலஸ்தீனம்  இஸ்லாமியர்களைக் கொண்ட நாடாகும், இஸ்லாமியர்கள் போலே யூதர்களும் தங்கள் புனித தளமாகக் கருதுகிறார்கள். 

ஜெருஸலேமிலுள்ள புனித அல் அக்சா பள்ளிவாசல் வளாகத்துக்குள் இஸ்ரேலிய பொலிஸார் நுழைந்ததையடுத்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. 

இம்மோதல்களையடுத்து சுமார் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் படைகள் உள்ளே புகுந்து இஸ்லாமியர்களை வெளியேற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback