Breaking News

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அமைச்சராக இருந்த அ.தி.மு.க ஆட்சியின் போது மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர்.இதையடுத்து மக்கள் நலப்பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது. ஆனால்  இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பாக  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்க்கிடையில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் மக்கள் நல பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7,500 ரூபாய் வழங்கப்படும்'' என அறிவித்தார். இதையடுத்து மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணியில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் தான் மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை எதிர்க்கும் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது 

இந்த வழக்கை விசாரித்த, அஜய் ரஸ்தோகி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மக்கள் நல பணியாளர்கள் திட்டம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போல் மக்கள் நலப் பணியாளர் திட்டமும் செயல்பட வேண்டும். என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதுமேலும்  பணி நீக்கம் செய்யபப்ட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரும் மீண்டும் பணியில் நியமிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback