ஏமன் நாட்டில் ரம்ஜான் இலவச பொருட்கள் வாங்க சென்ற மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 80 பேர் பலி வீடியோ இணைப்பு
ஏமன் நாட்டில் நிதி உதவி விநியோகிக்கும் நிகழ்வில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 80 பேர் பலியாகியுள்ளனர்.
ஏமன் நாட்டில் வசிக்கும் பல மக்கள் வறுமையில் இருக்கும் நிலையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள வியாபாரிகள் ஒன்று சேர்ந்து மக்களுக்கு நிதி உதவி மற்றும் இலவச உணவு பொருட்கள் வழங்க தலைநகர் சனாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தார்கள் .இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்கள் முண்டியடித்து கொண்டதில் பயங்கர நெரிசல் ஏற்பட்டது , இக்கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகி உள்ளனர். 322 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இங்குள்ள வியாபாரிகள் மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் நிதி வழங்கியுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்பாடுகள் ஏதும் செய்யாததால் இந்த விபரீதம் நடந்துள்ளது. இந்நிகழ்வு சரியாக திட்டமிடப்படாததால் அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும் இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தகவல் வெலீயாகியுள்ளது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/Viral_V5/status/1648858160348778496
https://twitter.com/zahraakobeisi/status/1648887040778313730
Tags: வெளிநாட்டு செய்திகள்