Breaking News

7 பேர் பலி வாங்கிய சிக்கிம் பனிசரிவு வீடியோ

அட்மின் மீடியா
0

சிக்கிம் மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலம் நாது லாகணவாய். இமயமலை அடிவாரத்தில் சீன எல்லை அருகே உள்ள இந்த இடம் தரைமட்டத்தில் இருந்து 14,140 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு நேற்று ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப்பயணிகள் 7 பேர் உயிரிழந்தனர் மேலும் சுமார் 150 சுற்றுலாப் பயணிகள் பனிசரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது



சிக்கிம் மாநிலத்தில் பிரபல சுற்றுலா பகுதி நாதுலா மலை முகடுகள். இது சீன எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு மார்ச் மாதங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும்.  காங்டாங் மற்றும் நாதுலா கணவாய் இடையே ஜவர்ஹர்லால் நேரு சாலையில் 15-வது மைல் பகுதியில் நேற்று மதியம் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது இந்த பனிச்சரிவில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கினர். 

அங்கு உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ராணுவத்தினர் மேற்கொண்டு பனிச்சரிவை அகற்றினர். அதன்பின் அவர்கள் மீட்கப்பட்டனர். காணாமல் போனவர்கள் பனிச்சரிவுக்குள் சிக்கியுள்ளனரா என ராணுவத்தினர் தேடி வருகின்றனர். நேற்று மாலை 4 மணி வரை 7 பேர் உயிரிழந்துள்ளார்கள் எனவும் 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கின்றது மேலும்  இராணுவ துறையினர், உள்ளூர் காவல் துறையினர் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்பு விவரம் குறித்து முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர்


வீடியோக்கள் பார்க்க:-

https://twitter.com/NiteshRPradhan/status/1643211207137181696

https://twitter.com/iindrojit/status/1643282831748259841

https://twitter.com/pooja_news/status/1643213974878420992

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback