Breaking News

கென்யாவில் தோண்ட தோண்ட பிணம் இயேசுவை பார்க்கலாம் என்ற பாதிரியாரின் பேச்சைக் கேட்டு கென்யாவில் பறிபோன 47 உயிர்கள்! முழு விவரம்

அட்மின் மீடியா
0

கென்யாவில் உணவு உண்ணாமல் இருந்தால் சொர்க்கத்துக்கு சென்று  இயேசுவை காணலாம் என்று கூறிய பாதிரியாரின் ஆலோசனையால் 47 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கென்யாவில் கடலோர நகரமான மலிந்திக்கு அருகில் உள்ள  குட் நியூஸ் இன்டர்நேஷ்னல் சர்ச் பாதிரியார் பால் மெக்கன்சி என்பவர் கடவுள் ஏசுவை  காண்பதற்கு உணவு, தண்ணீர் கூட அருந்தாமல் காத்திருந்தால் கண்டிப்பாக கடவுளை அடையலாம் என்று பிரச்சாரம் செய்து வந்துள்ளார். பாதரியாரின் பேச்சை உண்மை என நம்பி கிளிஃபி காட்டிற்குள் சென்று உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் இருந்துள்ளனர். மத போதகரின் பேச்சைக் கேட்டு, கடவுளைப் பார்க்கும் ஆசையில் அவர்கள் நோன்பிருந்ததில் பலர் இறந்துள்ளார்கள்

இது குறித்த  தகவல் அறிந்த போலீஸார் காட்டிற்க்கு சென்று உண்ணாவிரதம் இருந்தவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதில் நான்கு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பாதிரியார் கைது செய்யப்பட்டார். 

அதன் பின்பு அவரிடம் நடத்திய விசாரணையில் கடவுளை காணும் ஆசையில் உண்ணாவிரதம் இருந்த பலர் உயிரிழந்துள்ளார்கள் அவர்களை அந்த காட்டிலேயே அடக்கமும் செய்துள்ளார்கள் என தெரிய வந்தது 

மீண்டும் காட்டிற்க்கு வந்த போலீஸார் இதுவரை உயிரிழந்த 47 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது சம்பவம் நடந்த 800 ஏக்கர் பரப்பளவிலான காட்டுப் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது

மேலும் இச்சம்பவம் குறித்து கென்ய உள்துறை அமைச்சர் கித்தூர் கிண்டிகி கூறும்போது, 

அப்பாவிகள் உயிரிழந்த இந்தக் கொடூர சம்பங்களுக்கு காரணமானவருக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பத்துடன் தேவாலயங்கள், கோயில்கள், மசூதிகளில் கட்டுபாடுகள் இனி தீவிரமாக இருக்கும்' என்று தெரிவித்தார். 

News Source:-

https://www.bbc.com/news/world-africa-65363585

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback