Breaking News

ஆன்லைன் ரம்மி விளையாடினால் 3 மாதம் சிறைதண்டனை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அமலுக்கு வந்தது ஆன்லைன் சூதாட்ட தடை!!

அட்மின் மீடியா
0

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்



அதிமுக ஆட்சி காலத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது இந்த மசோதாவிற்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து திமுக ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றதும் ஆன்லைன் சூதாட்டம் மசோதாவை கொண்டு வர  சென்னை உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றபட்டு ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  சட்டமசோதாவிற்க்கு ஒப்புதல் அளிக்காமல்  ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவை  திருப்பி அனுப்பினார். 

இதையடுத்து மீண்டும் மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

இதைதொடர்ந்து கடந்த மாதம் 23 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். மார்ச் 24 ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 

சட்டமன்றத்தில் 2ஆவது முறையாக மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback