Breaking News

தமிழ்நாட்டில் 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை!

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் 1 ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு தேர்வுகள் மாவட்ட வாரியாக ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று இன்றுடன் முடிகின்றது



அதன்பின் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த ஒரு மாதம் விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும்.அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்,வேலை நாட்கள் உட்பட விவரங்கள் அடங்கிய வருடாந்திர காலஅட்டவணை மே 2-வது வாரத்தில் வெளியிடப்படும் 

முன்னதாக பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி இருக்கின்றன. எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றன

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback