பெற்றோர்களே ரெடியா 1 முதல் 9 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முழுவதும் அரசுக்கு சொந்தமான தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் பல செயல்பட்டு வருகின்றன. தற்போது ஆண்டு பொதுத்தேர்வுகள் நடந்து முடியவுள்ள நிலையில் விரைவில் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நாளை முதல் 28-ந்தேதி வரை பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தங்களது குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம்
Tags: கல்வி செய்திகள்