Breaking News

டெல்லி ஜாமியா மஸ்ஜித் இமாம் பாஜகவில் இணைந்தார் என பரவும் செய்தி உண்மை என்ன? Shahi Imam Bukhari Joins BJP?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  டெல்லி ஜாமியா மஸ்ஜித் இமாம் அஹ்மது புகாரி  பாஜகவில் இணைந்தார்  தில்லி ஜாமியாமஸ்ஜித் இமாம் அஹ்மது புகாரி BJPயில் இணைந்துள்ள தாகவும்... அடுத்த தேர்தலில் களம்இறங்க ப்போவதாகவும் தகவல் சமுதாயம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணம் சில ஆலிம்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. என்று  ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-

டெல்லி ஷாஹி இமாம் ஜூம்மா மஸ்ஜித் பாஜகவில் இணைந்தார் என்று  ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.

உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் மற்றும் வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த புகைப்படத்தை ஆராய்ந்தது, 

மேலும் அந்த புகைபடத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் 11.03.2023 அன்று டெல்லி ஜும்மா பள்ளி அருகில் மக்களுக்கு கழிப்பறை கட்ட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-

கடந்த 11.03.2023 அன்று டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ் வர்தன் தனது டிவிட்டர் பக்கத்தில்

#SwachhBharat Building toilets with dignity has brought tremendous health benefits for all, especially women.In this sequence, today I laid the foundation stone of a toilet near Gate No. 01 of Delhi's 'Jama Masjid' with my MP fund.

தமிழாக்கம்

SwachhBharat கண்ணியத்துடன் கழிப்பறைகள் கட்டுவது அனைவருக்கும், குறிப்பாக பெண்களுக்கு மிகப்பெரிய ஆரோக்கிய நலன்களை கொண்டு வந்துள்ளது. இந்த வரிசையில், இன்று எனது எம்பி நிதியில் டெல்லி 'ஜாமா மஸ்ஜித்' கேட் எண் 01க்கு அருகில் கழிப்பறைக்கு அடிக்கல் நாட்டினேன். எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில் ஷாஹி இமாம் பேசக்கூடிய வீடியோவினையும் ஹர்ஷ் வர்தன் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவையும் புகைப்படத்தையும் பதிவிட்டு அவர் பாஜகாவில் இணைந்து விட்டார் என தவறாக பலரும் ஷேர் செய்கின்றார்கள்


முடிவு:-


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://twitter.com/drharshvardhan/status/1634441625442172928

https://twitter.com/drharshvardhan/status/1634535680230453249

Tags: FACT CHECK மார்க்க செய்தி

Give Us Your Feedback