Breaking News

ஈரோடு இடைத்தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை..! வெற்றி பெறபோவது யார்…erode east bypoll 2023 results live updates

அட்மின் மீடியா
0

ஈரோடு கிழக்கு இடைதேர்த்லில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு கடந்த 27-ஆம் தேதி 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதில் 74.74 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அதன்படி, திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 15 சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகின்றது

காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது முதல் கட்டமாக எண்ணப்படும் தபால் வாக்குகள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதில், மொத்தமாக இந்த இடைத்தேர்தலில் 397 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்னும் சற்று நேரத்தில் தபால் வாக்குகள் முன்னிலை நிலவரம் தெரியவந்துவிடும்.


மதியம் 2;30 மணி நிலவரப்படி:-

திமுக கூட்டணி பெற்ற வாக்குக்கள்:- 61432

அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள்:- 22452

தேமுதிமுக பெற்ற வாக்குகள்:- 1017

நாம்தமிழர் பெற்ற வாக்குகள்:- 3604

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback