Breaking News

பெப்சி, கொக்கோ கோலா க்கு போட்டியாக ரிலையன்ஸ் அறிமுகபடுத்தும் கேம்ப கோலா முழு விவரம் campa cola

அட்மின் மீடியா
0

கேம்ப கோலா பானத்தை மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்துள்ள ரிலையன்ஸ்!

சுமார் 50 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட கேம்ப கோலா குளிர்பானத்தை இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ரிலையன்ஸ்.

ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்பு லிமிடெட் சார்பில் இது சந்தையில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


கேம்ப கோலா வரலாறு :-

1970 ம் ஆண்டுகளில் இந்திய சந்தையில் அறிமுகமான பானம்தான் கேம்ப கோலா. 

ப்யூர் ட்ரிங்ஸ் குழுமம் இதனை தயாரித்து விற்பனை செய்து வந்தது. இந்திய கோல்ட் டிரிங்க் சந்தையில் கேம்பா கோலாதான் முன்னிலையில் இருந்தது.  

கேம்ப கோலா வீழ்ச்சி:-

தாராளமயமாக்கல் கொள்கையால் கோக கோலா, பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு பிராண்டுகள் இந்தியாவில் நுழைந்த பிறகு கேம்பா கோலாவின் சந்தை மதிப்பு குறையத் தொடங்கியது. அதன்பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து அதன் பின்னர் சந்தையில் இருந்தே காணாமல் போய்விட்டது.மெல்ல தனது சந்தை வாய்ப்பை இழந்தது கேம்ப கோலா.

மீண்டும் கேம்ப கோலா:-

இந்நிலையில், கடந்த ஆண்டு 22 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் கேம்ப கோலாவை வாங்கியுள்ளது. 

முதற்கட்டமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் இதன் விற்பனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகி உள்ளது

முதற்கட்டமாக 

Campa Cola, 

Campa Lemon 

Campa Orange 

ஆகியவை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

200, 500 மற்றும் 600 மில்லி பேக்குகள் தவிர, 1 மற்றும் 2 லிட்டர் பேக்குகளிலும் கேம்பா விற்பனை செய்யப்பட உள்ளது

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட் (RCPL) இந்தியாவின் ஐகானிக் பான பிராண்டான கேம்பாவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.  தற்போது  ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடைல் ஸ்டோர்கள், ஜியோ மார்ட் உள்பட அனைத்து சாதாரண மளிகை கடைகளிலும் பெட்டிக்கடைகளிலும் இந்த குளிர்பானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback