வேலூர் ஹிஜாப் விவகாரம் 7 பேர் கைது முழு விவரம்
வேலூர் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும். இக்கோட்டை கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய இக்கோட்டை இதன் பாரிய மதில்கள், அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. இக்கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில், கிறித்தவ தேவாலயம், பள்ளிவாசல் ஆகியவை உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் என வருகை புரிவார்கள் இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி உள்ளூரை சேர்ந்த பெண் ஒருவர் ஹிஜாப் உடையுடன் தனது ஆண் நண்பருடன் கோட்டைக்கு வந்துள்ளார் அப்போது வேலூர் பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு ஆண் நண்பர்களுடன் வரக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அதனை வீடியோவாகவும் பதிவு செய்து அதனை வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக 20 பேரிடம் விசாரணை செய்து, அதில் ஏழு பேரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட எஸ்.பி.ராஜேஷ் கண்ணன் இன்று செய்தியாளர்களிடம்
கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் போது அனைத்து விவரங்களும் வெளியிடப்படும் என்றும் வேலூர் கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எந்தவித அச்சமும் இன்றி வந்து செல்வதாகவும் அவர் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்