Breaking News

மாணவ மாணவிகளே தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் -15 வகையான குற்றங்கள், தண்டனைகள் அறிவித்த தேர்வுத்துறை

அட்மின் மீடியா
0

மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் - 2023 தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு 

ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியல் வெளியீடு! 

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு வருகிற மார்ச் 13 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியலை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.


மேல்நிலை இரண்டாம் ஆண்டு

பள்ளி மாணவ/மாணவியர்களில் அறிவியல் பாடத் தொகுதியின்கீழ் மொத்தம் 5,36,819 மாணாக்கர்களில் 2,92,262 மாணவிகளும், 2,44,557 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் மொத்தம் 2,54,045 மாணாக்கர்களில் மாணவிகள் 1,25,598 மாணவர்கள் 1,28,446 ஆவர். கலை (Arts) பாடத்தொகுதியின் கீழ் மொத்தம் 14,162 மாணாக்கர்களில் 7,103 மாணவிகளும், 7,059 மாணவர்களும் தேர்வெழுத உள்ளனர். தொழிற்கல்வி பாடத்தொகுதியின் கீழ் மொத்தம் 46,277 மாணாக்கர்களில் மாணவிகள் 16,201 மாணவர்கள் 30,076


மேல்நிலை முதலாம் ஆண்டு

பள்ளி மாணவ/மாணவியர்களில் அறிவியல் பாடத் தொகுதியின்கீழ் மொத்தம் 4,99,143 மாணாக்கர்களில் 2,76,625 மாணவிகளும், 2,22,518 மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்வெழுத உள்ளனர். வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் மொத்தம் 2,40,177 மாணாக்கர்களில் மாணவிகள் 1,22,791 மாணவர்கள் 1,17,386 ஆவர். கலை (Arts) பாடத்தொகுதியின் கீழ் மொத்தம் 12,813 மாணாக்கர்களில் 7,195 மாணவிகளும், 5,618 மாணவர்களும் தேர்வெழுத உள்ளனர். தொழிற்கல்வி பாடத்தொகுதியின் கீழ் மொத்தம் 35,931 மாணாக்கர்களில் மாணவிகள் 13,746 மாணவர்கள் 22,185

சென்னை தேர்வு மையம் / மாணவர்கள்:

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை சென்னை மாநகரில் உள்ள 405 பள்ளிகளிலிருந்து 180 தேர்வுமையங்களில் மொத்தம் 45,982 மாணாக்கர்களில் 23,827 மாணவிகளும், 22,155 மாணவர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வினை சென்னை மாநகரில் உள்ள 398 பள்ளிகளிலிருந்து 180 தேர்வுமையங்களில் மொத்தம் 42,122 மாணாக்கர்களில் 22,574 மாணவிகளும், 19,548 மாணவர்களும் தேர்வெழுதவுள்ளனர். சிறையில் தேர்வு மையம்:

மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர். 

மாற்றுத் திறனாளி தேர்வர்கள்:-

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் டீஸ்லெக்சியா பாதிப்புள்ள மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர்/வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப் பாடவிலக்களிப்பு, கூடுதல் ஒரு மணி நேரம்) அரசாணை (நிலை) எண்.62, பள்ளிக் கல்வி (அ.தே)த் துறை, நாள்:25.03.2022-ன்படி, ஆணையிடப்பட்டுள்ளது. 

அரசுத் தேர்வுத் துறையால் ஒப்பளிக்கப்பட்டு தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிட ஆவன செய்யுமாறு மின்சார வாரியத் தலைவருக்குக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் ஆகிய இடங்களில் போதிய ஆயுதம் தாங்கிய காவல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய காவல் துறைத் தலைவருக்கும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வினை எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காவண்ணம் செம்மையாக நடத்திட அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வு அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட்டு தேர்வுப் பணிகளில் எவ்வித சுணக்கமுமின்றி பொறுப்புடன் செயலாற்றுமாறு அனைவருக்கும் அறிவுரைகள் அடங்கிய கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கால கண்காணிப்பு ஏற்பாடுகள்:-

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித் துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவர். அக்குழுவில் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அவரவர்களது மாவட்டங்களில் அவரவர் எல்லைக்குட்பட்டத் தேர்வு மையங்களை திடீர் பார்வையிட்டு முறைகேடுகள், ஒழுங்கீனச் செயல்கள் எதுவும் நடைபெறா வண்ணம் தீவிரமாகக் கண்காணித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் ஆகியோர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்வு முன்பணிகளையும், தேர்வுக்கால பணிகளையும் மேற்பார்வையிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட உரிய அரசாணை பெறப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 3,100 எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் (Flying Squad and Standing Squad) முதன்மைக் கல்வி அலுவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆய்வு அலுவலர்களான முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர், அம்மாவட்டத்திலுள்ள அனைத்துத் தேர்வு மையங்களையும் சரிசமமாகப் பிரித்துக் கொண்டு தேர்வு நாட்களின்போது தங்களுடன் கண்காணிப்புக் குழுவை அழைத்துக் கொண்டு தேர்வு மையங்களைப் பார்வையிட்டு முறைகேடுகள் ஏதுவும் நடைபெறாவண்ணம் தீவிரமாகக் கண்காணித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அலைபேசி தடை:-

தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் அலைபேசியை கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. மேலும் தேர்வர்களது அலைபேசிகள் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒழுங்கீனச் செயல்பாடுகள்:-

தேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல் துண்டுத்தாட்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையோ / பகுதி விடைகளையோ தாமே கோடிட்டு அடித்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும். இக்குற்றங்களுக்கு இத்துடன் இணைத்தனுப்பப்படும் தண்டனைகள் குறித்த பட்டியலில் உள்ளவாறு தண்டனைகள் வழங்கப்படும்.

மேலும் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ / ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளித் தேர்வு மையத்தினை இரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை இரத்து செய்திட பள்ளிக் கல்வி/மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்குப் பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்வுக்கட்டுபாட்டு அறை அமைத்தல்

13.03.2023 அன்று தொடங்கி 03.04.2023 வரை நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மற்றும் 14.03.2023 அன்று தொடங்கி 05.04.2023 வரை நடைபெறவுள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக, மாணவர்கள்/தேர்வர்கள்/பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை தொடர்புக் கொண்டு பயன்பெற்றிட தெரிவிக்கப்படுகிறது.

தேர்வுக் கட்டுப்பாட்டு அறை - தொடர்பு எண்கள்

9498383081

9498383075

மேற்காண் முன்னேற்பாட்டுப் பணிகள் அரசின் சீரிய வழிகாட்டலின்படி அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது 

இடைநிலை/மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த செய்திக் குறிப்பு

1.தேர்வர்கள் தேர்வின்போது அச்சடித்த புத்தகங்கள் கையேடுகள் அல்லது கையெழுத்துப் பிரதி ஏதேனும் தன் வசம் வைத்திருந்து தாமாகவே அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தல்.

முதன்மைக் கண்காணிப்பாளரால் எச்சரிக்கை செய்யப்படுவார். தேர்வர் இத்தவறினை அதே பருவத்தில் மீண்டும் செய்தால் அவரிடமிருந்து எழுத்துப் பூர்வ விளக்கம் பெற்று வெளியேற்றப்படுவார். அடுத்து வரும் தேர்வுகளை எழுத தடையில்லை.

2,தேர்வர்கள் அச்சிடப்பட்ட புத்தகங்கள், கையேடுகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் துண்டுச் சீட்டுகள் ஏதேனும் தன்வசம் வைத்திருப்பதை அறைக் கண்காணிப்பாளரால் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை தேர்வர்கள் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தால்.

தேர்வரிடமிருந்து எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெற்று மையத்தை விட்டு முதன்மைக் கண்காணிப்பாளரால் வெளியேற்றப்படுவார். அடுத்து வரும் தேர்வுகளை எழுத தடையில்லை.

தேர்வர் ஆட்சேபனைக்குரிய பொருட்களை தன்வசம் வைத்திருந்து அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால் | அன்றைய தேர்வு இரத்து செய்யப்படும்.

தேர்வர் ஆட்சேபனைக்குரிய பொருட்களை தன் வசம் வைத்திருந்து பயன்படுத்தி இருந்தால் அன்றைய தேர்வு இரத்து செய்யப்படுவதுடன் | மேலும், அடுத்த ஓராண்டு அதாவது இரு பருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும்.

3.தேர்வர் மற்றத் தேர்வரின் விடைத்தாளை தேர்வெழுதியிருந்தாலோ அல்லது பிறரின் உதவியினை தேர்வறைக்கு உள்ளேயோ அல்லது வெளியில் இருந்து பெற்றது கண்டறியப்பட்டால்.

தேர்வரிடமிருந்து எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெற்று மையத்தை விட்டு முதன்மைக் கண்காணிப்பாளரால் வெளியேற்றப்படுவார்.

அடுத்து வரும் பாடத் தேர்வுகளை எழுத தடையில்லை.

தேர்வு இரத்து செய்யப்படுவதுடன், சூழ்நிலை | மற்றும் சான்றுகளின் அடிப்படையில் ஓர் ஆண்டு அல்லது அடுத்த இருபருவத் தேர்வுகளுக்கும் அதிகமான பருவங்கள் தேர்வெழுத தடை விதிக்கப்படும்.

4. ஒரு தேர்வர் துண்டுத்தாளை தன்வசம் வைத்திருந்து எழுதியிருந்தாலோ / எழுத முயற்சி செய்தது கண்டறியப்பட்டால்.

தேர்வர் அப்பருவத்தில் எழுதிய அனைத்து பார்த்து பாடத் தேர்வுகளும் இரத்து செய்யப்படுவதுடன் குற்றத்தின் தன்மை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த இரு பருவங்களுக்கும் தேர்வெழுத தடை விதிக்கப்படும்.

5.தேர்வர்கள் அல்லது அவரைச் சார்ந்த நபர்கள் தேர்வுப் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன் தொடர்பு கொண்டு உதவி பெற நிர்பந்தித்து இருந்தால்.

அப்பருவத் தேர்வு தடை செய்யப்பட்டு சூழ்நிலை பணிகளில் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட காலம் வரை தேர்வெழுத தடை விதிக்கப்படும்.

6.ஆள்மாறாட்டம் செய்தல்.

அப்பருவத் தேர்வு இரத்து செய்யப்படுவதுடன் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்.

7.விடைத்தாளை பரிமாற்றம் செய்தல்.

தேர்வுகள் இரத்து செய்யப்படுவதுடன், சூழ்நிலை | மற்றும் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட | பருவங்கள் தேர்வெழுதத் தடை விதிக்கப்படும்.

8.தேர்வர்கள் விடைத்தாளில் தவறான அல்லது புண்படுத்தும் வார்த்தைகளை எழுதினாலோ அல்லது தேர்ச்சி மதிப்பெண்களை வழங்குமாறு விடைத்தாள் மதிப்பீட்டாளருக்கோ அல்லது இயக்குநருக்கோ இருந்தால். அரசுத் தேர்வுகள் கடிதம் எழுதி இருந்தால்

குறிப்பிட்ட பாடத் தேர்வு இரத்து செய்யப்படும்.

9.தேர்வறை கண்காணிப்பாளரிடம் தேர்வறையில் அல்லது தேர்வறைக்கு வெளியில் தவறாக நடந்து கொண்டால். (தகாத வார்த்தைகளால் திட்டுதல் தாக்குதல்)

முதன்மைக் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி தேர்வறையிலிருந்து வெளியேற்றப்படுவதுடன் பிற பாடத் தேர்வுகளும் எழுத தடை விதிக்கப்படுவார் அல்லது தேர்வுகள் இரத்து செய்யப்படுவதுடன் குறிப்பிட்ட பருவங்கள் தேர்வு எழுத  தடை / நிரந்தர தடை விதிக்கப்படும்.

10.விடைத்தாளை தேர்வு அறைக்கு வெளியே எடுத்து செல்வது அல்லது அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றுவிட்டு உடனடியாக திரும்ப வந்து ஒப்படைத்தல் / ஒப்படைக்காவிட்டாலும், தேர்வறையில் விடைத்தாளை கிழித்தல்.

தேர்வர் முதன்மைக் கண்காணிப்பாளரால் எச்சரிக்கை செய்யப்பட்டு, அப்பாடத் தேர்வு இரத்து செய்யப்படும்.

11.வினாத்தாளை வெளியில் அனுப்புதல்

தேர்வு இரத்து செய்யப்பட்டு மூன்றாண்டுகள் அதாவது அடுத்தடுத்த ஆறு பருவத் தேர்வுகள் | இரத்து செய்யப்படும்.

12.அறைக் கண்காணிப்பாளர் அல்லது முதன்மைக் கண்காணிப்பாளரிடம் விளக்கம் அளிக்க மறுத்தல். 

அப்பாடத் தேர்வு இரத்து செய்யப்படுவதுடன் அடுத்துவரும் பாடத் தேர்வுகளும் எழுத தடை விதிக்கப்படும்.

13.மதிப்பீட்டு பணி / சிறப்பு கூர்ந்தாய்வின் போது அடிப்படையில் அகச்சான்றுகளின் பார்த்து எழுதியது கண்டுபிடிக்கப்பட்டால் .

அப்பாடத் தேர்வு இரத்து செய்யப்படுவதுடன் அடுத்துவரும் இருபருவத் தேர்வுகள் எழுத தடை.

14. விடைத்தாள் மற்றும் கூடுதல் விடைத்தாள்களில் உள்ளே / வெளியே அடையாளப்படுத்தும்படி சிறப்பு குறியீடுகள் (பெயர் / தலைப்பெழுத்து/ பிற அடையாள எழுதப்பட்டால். குறியீடுகள்)

தேர்வரின் விளக்கத்தினை பெற்ற பின் சூழ்நிலையைப் பொருத்து எச்சரிக்கை அல்லது அப்பாடத் தேர்வு இரத்து செய்யப்படும்.

15. வினாத்தாளில் விடை எழுதி அதை பிறத் தேர்வருக்கு வழங்கும் வகையில் தூக்கி எறிதல் .

அப்பாடத் தேர்வு இரத்து செய்யப்படும்.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback